பொது மக்களை பெரிதும் பாதிக்கும் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

பொது மக்களை பெரிதும் பாதிக்கும் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

Update: 2022-04-11 17:52 GMT
தர்மபுரி:
பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரி சந்தைப்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஐஸ்வர்யம் முருகன், பிரவீன், வெங்கட்ராஜ், மாவட்ட பொருளாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி தலைவர் புவனேஷ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத்தலைவர் நரேந்திரன் கலந்துகொண்டு தீர்மானங்கள் குறித்தும், கட்சி பணிகள் குறித்தும் விளக்கி பேசினார். 
தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் செல்லபாண்டியன், சிவன், சோபன், கிருத்திகா, ஐவண்ணன், கல்வியாளர் பிரிவு இமானுவேல், மருத்துவர் பிரிவு டாக்டர் சுப்ரமணியன், மகளிர் பிரிவு அனிதா, மாநில பொதுக்குழு உறுப்பினர் கல்பனா, மாவட்ட செயலாளர்கள் வெள்ளையன், சவுந்தரராஜன், கிருஷ்ணவேணி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட நிர்வாகி ரமேஷ் வர்மா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்