மூதாட்டியை ஏமாற்றி 6½ பவுன் நகை திருட்டு
மூதாட்டியை ஏமாற்றி 6½ பவுன் நகை மர்ம நபர் திருடி சென்று விட்டார்.
விழுப்புரம்
செஞ்சி அருகே உள்ள காட்டு சித்தாமூரை சேர்ந்தவர் தேவபாலன் மனைவி சொர்ணம்மாள் (வயது 80). இவரது மகன் அச்சுதன் (50). திருமணமாகாதவர். நேற்று காலை அச்சுதன் மாடு மேய்க்க வெளியில் சென்றுவிட்டார்.
வீட்டில் சொர்ணாம்பாள் மட்டும் தனியாக இருந்த போது, 40 வயதுடைய நபர் அங்கு வந்தார். அவர், நான் உங்களது நிலத்துக்கு பக்கத்து நிலத்துக்காரர் என்று கூறினாா். மேலும் தனது மகளுக்கு உங்களிடம் உள்ள நகையை போன்று நகை செய்ய இருப்பதாகவும், அதை தன்னிடம் காண்பிக்குமாறு கூறியுள்ளாா்.
இதை நம்பிய சொர்ணாம்மாள், பீரோவை திறந்து நகையை எடுத்து காட்டியுள்ளாா். பின்னா சொர்ணாம்மாளின் கவனத்தை திசைதிருப்பி அவர் வைத்திருந்த 6½ பவுன் நகை, ரூ.40 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.