வாகனங்களின் கண்ணாடியை கல்லால் உடைத்த வாலிபர் கைது
கடலூர் முதுநகரில் வாகனங்களின் கண்ணாடியை கல்லால் உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் சங்கரன் தெருவில் ஒரு மினி லாரி மற்றும் ஆட்டோ நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், 2 வாகனங்களின் முன்பக்க கண்ணாடிகளை கருங்கல்லால் அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் அந்த வாலிபரை பிடித்து நடத்திய விசாரணையில் அவர் ஆற்றங்கரை வீதியை சேர்ந்த மேகநாதன் மகன் மதன்குமார் (வயது 22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.