அரசு பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

திருக்கோவிலூரில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

Update: 2022-04-11 17:21 GMT
திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகர் மன்ற தலைவர் டி.என்.முருகன் தலைமை தாங்கினார். நகர் மன்ற துணைத்தலைவர் உமாமகேஸ்வரி குணா, நகர் மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரிராஜா, சக்திவேல், மற்றும் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பெற்றோர் -ஆசிரியர் கழக தலைவர் சண்முகம் வரவேற்றார். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் கலந்து கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற மாணவர்கள் எவ்வாறு ஒழுக்கத்துடன் கல்வி கற்க வேண்டும் என்பது பற்றி விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் காவலன் செயலியின் பயன்கள் குறித்தும் விளக்கி கூறினார். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் சஞ்சீவி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்