அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பாருக்கு சீல்

அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பாருக்கு சீல் வைக்கப்பட்டது

Update: 2022-04-11 16:53 GMT
சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி, புத்தூர், கதிராமங்கலம், வள்ளுவக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளை ஒட்டி அனுமதி பெறாமல் சிலர் பார் வைத்து நடத்தி வருவதாக அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் புகார்கள் சென்றன.
 அந்த புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வாசுதேவன், போலீசாருடன் நேற்று சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு சென்றார். அதிகாரி மற்றும் போலீசார் வருவதை கண்டதும் அங்கு அனுமதியின்றி பார் நடத்தியவர் கடையை பூட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
சீல் வைப்பு
 அதனைத்தொடர்ந்து அந்த பாருக்கு டாஸ்மாக் மேலாளர் வேறொரு பூட்டை போட்டு பூட்டி சீல் வைத்ததோடு அங்கு எச்சரிக்கை நோட்டீசை ஒட்டினார்.
 இதுகுறித்து அவர் கூறுகையில், சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடை அருகே அனுமதி இல்லாமல் ெசயல்படும் பார் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த மாதம் மயிலாடுதுறையில் அனுமதி பெறாமல் செயல்பட்ட 3 பாருக்கு சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

மேலும் செய்திகள்