1500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
1500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
திருப்பூர், ஏப்.12-
திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் நேற்று உடுமலை கன்னமநாயக்கனூர் அருகில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். ரேஷன் பொருட்கள் பதுக்கல் தொடர்பான ரகசிய தகவலை தொடர்ந்து வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் மூட்டையில் ரேஷன் பச்சரிசி இருந்தது தெரியவந்தது. அதை குறைந்தவிலைக்கு வாங்கி வந்து மற்றவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
விசாரணையில் அவர் கன்னமநாயக்கனூரை சேர்ந்த ஹக்கீம் (வயது 52) என்பது தெரியவந்தது. அவர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 1,500 கிலோ ரேஷன் பச்சரிசி மற்றும் மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹக்கீமை கைது செய்தனர்.