வடமாநில தொழிலாளர்களை தாக்கிய 2 பேர் கைது

வடமாநில தொழிலாளர்களை தாக்கிய 2 பேர் கைது

Update: 2022-04-11 16:25 GMT
திருப்பூர், 
திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் ரவி செல்வம் (வயது 31).இவர் அப்பகுதியில் உள்ள பனியன் நிட்டிங் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவருடைய நிறுவனத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அபுல்காசிம், அலி உசேன் ஆகியோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று காலை வெள்ளியங்காடு 60 அடி ரோடு வழியாக அபுல்காசிம், அலிஉசேன் இருவரும் நடந்து சென்றபோது வெள்ளியங்காட்டை சேர்ந்த சரவணன் (47), செந்தில் (43) ஆகியோர், இருவரையும் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து ரவிசெல்வத்திடம் செல்போனில் தெரிவிக்க, அவர் அங்கு வந்து தட்டிக்கேட்டுள்ளார். அப்போது சரவணன், செந்தில் ஆகியோர் சேர்ந்து 3 பேரையும் தாக்கி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து ரவிசெல்வம் அளித்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், செந்தில் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்