அமலாக்கத்துறையின் கொடூர சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட வேண்டும்- மந்திரி சகன்புஜ்பால் பேச்சு

அமலாக்கத்துறையின் கொடூர சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று மந்திரி சகன்புஜ்பால் பேசினார்.

Update: 2022-04-11 16:04 GMT
படம்
அவுரங்காபாத், 
அமலாக்கத்துறையின் கொடூர சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று மந்திரி சகன்புஜ்பால் பேசினார். 
அமலாக்கத்துறை நடவடிக்கை
மராட்டிய ஆளும் கட்சி தலைவர்கள் அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக அமலாக்கத்துறை வழக்கில் மந்திரி பதவியை இழந்த அனில் தேஷ்முக், கைதாகி பல மாதங்களாக சிறையில் உள்ளார். அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. 
இந்த நிலையில் அவுரங்காபாத்தில் சமூக சீர்திருத்தவாதி மகாத்மா புலே பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட மந்திரி சகன் புஜ்பால் பேசியதாவது:-
ரத்து செய்யப்பட வேண்டும்
அமலாக்கத்துறையின் கீழ் கொடூரமான சட்டப்பிரிவுகள் உள்ளன. இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்படுவர்களுக்கு எளிதில் ஜாமீன் கிடைப்பதில்லை. மந்திரிகள், மக்கள் பிரதிநிதிகள் மீது, வேண்டுமென்றே இந்த கொடூரமான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. பழிவாங்கும் நடவடிக்கையாக அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். 
எனவே கொடூர சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட வேண்டும். இது தொடர்பான அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.
ஊழல் வழக்கில் மந்திரி சகன் புஜ்பாலும் நீண்ட காலமாக சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 
----------------




மேலும் செய்திகள்