அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா

Update: 2022-04-11 14:53 GMT
ஊட்டி 

ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் சொத்து வரி உயர்வு தொடர்பான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். மேலும் அலுவலக தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு, கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூறும்போது, சொத்து வரியை உயர்த்த அரசு தீவிரம் காட்டி வருகிறது.

காலி மனைக்கும் வரி உயர்த்தப்படுகிறது. சுற்றுலா தொழிலை நம்பி உள்ள ஊட்டி மக்கள், கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அரசு எந்தவொரு நிவாரணமும் வழங்கவில்லை. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களை, சொத்து வரி உயர்வு மூலம் மேலும் பாதிப்படைய செய்யக் கூடாது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு சமம். எனவே சொத்து வரி உயர்வை கைவிட வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்