தூத்துக்குடியில் தொழிலாளி மீது தாக்குதல்

தூத்துக்குடியில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-11 11:57 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்தவர் ஜஸ்டின். இவருடைய மகன் சுரேஷ் (வயது 47). தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சைமன் மகன் கிரவுண்ட்சன் (32) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்து உள்ளது. இதன் காரணமாக சம்பவத்தன்று சுரேஷ் தனது வீட்டில் முன்பு நின்று கொண்டிருந்தாராம். அங்கு வந்த கிரவுண்ட்சன், சுரேசிடம் தகராறு செய்து சாப்பிட பயன்படுத்தும் முள் கரண்டியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் சிங் வழக்குப்பதிவு கிரவுண்ட்சனை கைது செய்தார்.

மேலும் செய்திகள்