கோயம்பேடு விடுதியில் விபசாரம்; மேலாளர் உள்பட 6 பேர் கைது

கோயம்பேடு போலீசாருக்கு வந்த தகவலையடுத்து, போலீசார் கோயம்பேடு விடுதிக்கு சென்று சோதனை செய்து , இளம் பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Update: 2022-04-11 11:57 GMT
கோயம்பேடு அடுத்த சின்மயா நகர் பகுதியில் உள்ள விடுதியில் விபசாரம் நடப்பதாக, கோயம்பேடு போலீசாருக்கு வந்த தகவலையடுத்து, கோயம்பேடு போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து விடுதி மேலாளர் சீனிவாசன் (60), என்பவரை கைது செய்த போலீசார், அங்கிருந்து 5 இளம் பெண்களை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்க வந்த வாடிக்கையாளர்கள் 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்