அனுமதியின்றி விளம்பர பதாகை; அச்சகம் மீது வழக்கு

அனுமதியின்றி விளம்பர பதாகை வைக்கப்பட்டது தொடர்பாக அச்சகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-04-10 23:02 GMT
திருச்சி:
திருச்சி தில்லைநகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தென்னூர் மகாத்மா காந்தி பள்ளி அருகே இசைக்கச்சேரி தொடர்பாக அனுமதியின்றி விளம்பர பதாகை வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், விளம்பர பதாகையை அச்சிட்ட உறையூரில் உள்ள அச்சகம் மற்றும் அதை வைத்தவர் மீது தில்லைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்