கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கடையநல்லூரில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அச்சன்புதூர்:
கடையநல்லூரில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், தமிழக அரசு அண்மையில் உயர்த்தியுள்ள வீட்டுவரி, சொத்துவரி, காலிமனை வரியை ரத்து செய்யக்கோரியும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அய்யப்பன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அயூப்கான், சேக் மைதீன், மாரியப்பன், முத்துசாமி, தம்பித்துரை, விருதுநகர் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினார்கள்.