கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு; அப்துல் வகாப் எம்.எல்.ஏ. வழங்கினார்

நெல்லையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு அப்துல் வகாப் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.

Update: 2022-04-10 20:01 GMT
நெல்லை:
நெல்லை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ‘தலைவர் கிரிக்கெட் லீக் போட்டி’ நடைபெற்றது. இந்த போட்டியானது பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் மற்றும் அன்புநகர் மைதானங்களில் நடைபெற்றது. போட்டிகளை இளைஞர் அணி மாநில துணை செயலாளர் தாயகம் கவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதன் இறுதிப்போட்டியில் நெல்லை கிழக்கு மாவட்ட அணியும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அணியும் மோதின. அதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, முதலிடம் பிடித்த தூத்துக்குடி அணிக்கு பரிசு கோப்பையை வழங்கினார். மத்திய மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை            வரவேற்றார். இதில் தனுஷ்குமார் எம்.பி., நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மண்டல தலைவர்கள் பாளையங்கோட்டை பிரான்சிஸ், நெல்லை மகேசுவரி, நெல்லை கிழக்கு இளைஞர் அணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்