கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம்

ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்ட நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர்.

Update: 2022-04-10 20:00 GMT
கும்பகோணம், ஏப்.11:
யொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்ட நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர். 
ராமசாமி கோவில் 
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ராமநவமி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ் இந்த ஆண்டுக்கான ராமநவமி விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாட்களில் தினமும் அனுமந்த வாகனம், இந்திர விமானம், சூரியபிரபை, சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது. 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று ராம நவமியையொட்டி ராமபிரான், சீதாதேவி, லட்சுமணர் மற்றும் அனுமன் ஆகியோர் திருத்தேருக்கு எழுந்தருளினர். அதனை தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்ததும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்