தி.மு.க. பொதுக்கூட்டம்; அமைச்சர் ராஜ கண்ணப்பன் பங்கேற்பு
நாங்குநேரியில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பங்கேற்றார்.
இட்டமொழி:
நாங்குநேரியில் தி.மு.க. சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். நாங்குநேரி நகர செயலாளர் வானமாமலை, யூனியன் தலைவர் சவுமியா எட்வின், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கிய எட்வின், ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, செல்வ கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ.பிரபாகரன், தி.மு.க. நிர்வாகி கணேஷ்குமார் ஆதித்தன், கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜான் ரபீந்தர், மாவட்ட துணை செயலாளர் சித்திக், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் என்.ஞானராஜ், இலங்குளம் பஞ்சாயத்து தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் அருள்ராஜ் டார்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.