வாலிபரை அரிவாளால் வெட்டி நகை பறிப்பு

கபிஸ்தலம் அருகே இடப்பிரச்சினையில் வாலிபரை அரிவாளால் வெட்டி நகையை பறித்துச்சென்ற அண்ணன், தம்பி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-10 19:47 GMT
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே இடப்பிரச்சினையில் வாலிபரை அரிவாளால் வெட்டி நகையை பறித்துச்சென்ற அண்ணன், தம்பி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 
முன்விரோதம் 
கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் புதுத்தெருவில் வசிப்பவர் சத்தியசீலன் மகன் அரவிந்த்(வயது28). விவசாயி. இவருக்கும், இலுப்ப கோரை கிராமத்தில் வசிக்கும் மகாலிங்கம் மகன்கள் தவமணி(56), சுரேஷ்(36), ஆனந்த்(32) ஆகிய 3 பேருக்கும் இடம் சம்பந்தமான முன்விரோதம் இருந்து வந்தது. 
அரிவாள் வெட்டு 
சம்பவத்தன்று அரவிந்த் தனக்கு சொந்தமான கணபதிஅக்ரஹாரம் பூஞ்சோலை திடல் பகுதியில் உள்ள கரும்பு கொல்லையில் மரத்தை வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த  தவமணி, சுரேஷ், ஆனந்த ஆகிய 3 பேரும் சேர்த்து அரவிந்த்தை அரிவாளால் வெட்டி அவரிடம் இருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த அரவிந்த்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு  தஞ்சை  மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 
அண்ணன், தம்பி கைது 
இதுகுறித்து அரவிந்த் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், ராஜ்கமல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து   தவமணி, சுரேஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதில் தொடர்புடைய ஆனந்த் என்பவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்