சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
அருப்புக்கோட்டை அருகே சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அன்பு மாடல்நகரில் சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த ேகாவிலில் ராம நவமியை முன்னிட்டு சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.