மின்சாரம் பாய்ந்து 12 ஆடுகள் செத்தன

அரவக்குறிச்சி அருகே மின்சாரம் பாய்ந்து 12 ஆடுகள் செத்தன.

Update: 2022-04-10 19:27 GMT
அரவக்குறிச்சி, 
விவசாயி
அரவக்குறிச்சி ஒன்றியம் மொடக்கூர் மேல்பாகம் ஊராட்சி கோவிலூரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 62), விவசாயி. இவருடைய மனைவி தமிழரசி அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக உள்ளார். இவர்களது தோட்டம் கோவிலூரில் உள்ளது.
நேற்று முன்தினம் மாலை இவர்களது தோட்டத்தில் செம்மறி ஆடுகளை மேய விட்டு இருந்தார்கள். அப்போது பலத்த மழை பெய்தது.
மின்சாரம் பாய்ந்து ஆடுகள் செத்தன
இதனால் மேய்ந்து கொண்டிருந்த செம்மறி ஆடுகள் தோட்டத்து கம்பி வேலி பகுதியில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தது. அப்போது கம்பத்தில் இருந்த மின்சார கம்பி அறுந்து தோட்டத்து கம்பிவேலி மீது விழுந்தது. அப்போது ஒதுங்கி இருந்த செம்மறி ஆடுகள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், 12 செம்மறி ஆடுகள் செத்தன.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மீனாட்சி வலசு கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த ஆடுகளை பரிசோதனை செய்தனர். பின்பு அப்பகுதியிலேயே பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு 12 செம்மறி ஆடுகளும் புதைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்