வீட்டில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன
சிவகங்கை,
சிவகங்கை அடுத்துள்ள பி.குளத்துப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக சிவகங்கை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் அந்த வீட்டில் சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 28 மூடைகள் இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த மூடைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி ராஜா (வயது42), வினோத் (30) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.