மாநில அளவிலான சைக்கிள் போட்டி

விருதுநகர் மாவட்ட சைக்கிள் கிளப் சார்பில் மாநில அளவிலான சைக்கிள் போட்டி நேற்று நடைபெற்றது.

Update: 2022-04-10 18:52 GMT
சிவகாசி, 
விருதுநகர் மாவட்ட சைக்கிள் கிளப் சார்பில் மாநில அளவிலான சைக்கிள் போட்டி நேற்று நடைபெற்றது. அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற இந்த போட்டியை அரசன் கிரிதரன் தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் முழுவதும் இருந்தும் 13 மாவட்டங்களை சேர்ந்த 107 வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டிகள் 22 பிரிவுகளாக நடத்தப்பட் டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சுழற்கோப்பை, பதக்கம், சான்றிதழ் ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன.  போட்டிக்கான ஏற்பாடுகளை சைக்கிளிங் கிளப் நிர்வாகிகள் ராஜா, முரசொலி, கல்லூரியின் முதல்வர் நந்தகுமார், உடற் கல்வி ஆசிரியர் மதனகோபால், சிவகுருநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்