ராப்பூசலில் 13-ந்தேதி ஜல்லிக்கட்டு: முன்னேற்பாடு பணிகளை கோட்டாட்சியர் ஆய்வு
ராப்பூசலில் 13-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகளை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.
அன்னவாசல்:
இலுப்பூர் அருகே பிரசித்தி பெற்ற ராப்பூசல் முனி ஆண்டவர் கோவில் ஜல்லிக்கட்டு நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழிஅரசு, ஊர் முக்கியஸ்தர் வக்கீல் விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் முனியாண்டி, கவுன்சிலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.