கண்மாயில் மீன்பிடி திருவிழா

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எருமைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முத்தாண்டிபட்டியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது

Update: 2022-04-10 18:34 GMT
சிங்கம்புணரி,
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எருமைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முத்தாண்டிபட்டி பகுதியில் அமைந்து உள்ளது முத்தாண்டி கண்மாய். இந்த கண்மாயில்  ஆயக்கட்டு காரர்கள் சார்பில் மீன்பிடித் திருவிழா நடந்தது. ஒப்பந்தக்காரர் மற்றும் கிராமத்தின் முக்கியஸ்தர்கள் கரையில் நின்று பச்சைக் கொடியை காட்டியவுடன் கரையில் நின்ற கிராம மக்கள் கண்மாயில் இறங்கி ஊத்தாவை பயன்படுத்தி மீன்களை பிடித்தனர். அனைவரும் கிடைத்த மீன்களை பிடித்து சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். ஏற்பாடுகளை முத்தாண்டி பட்டி கிராமத்தினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்