இதமான காலநிலை நிலவுவதால் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
வால்பாறையில் இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது
வால்பாறை
வால்பாறையில் இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
வால்பாறை
மலைபிரதேசமான வால்பாறையில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு இதமான காலநிலை நிலவும் என்பதால் இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம்.
கோடைகாலம் தொடங்கியதால் இங்குள்ள நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்துவிட்டது. அத்துடன் வெயிலின் தாக்கமும் அதிகரித்தது.
இந்த நிலையில் கடந்த 18-ந் தேதியில் இருந்து வால்பாறை பகுதியில் கோடை மழை தொடங்கியது. சில இடங்களில் கனமழையாகவும், ஒருசில இடங்களில் மிதமான மழையாகவும் பெய்து வருகிறது.
இதன் காரணமாக வால்பாறையில் நிலவிய வெப்பம் தணிந்து தற்போது இதமான காலநிலை நிலவி வருகிறது.
வருகை அதிகரிப்பு
இதற்கிடையே கடந்த 2 நாட்களாக அவ்வப்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால், இங்குள்ள நீரோடைகளில் தண்ணீர் செல்ல தொடங்கி இருக்கிறது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது.
விடுமுறை நாளான வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். அங்கு குறைவான அளவே தண்ணீர் செல்வதால் அந்த ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
இதமான காலநிலை
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, வால்பாறையில் தற்போது பரவலாக மழை பெய்வதால் குளு குளுவென இதமான காலநிலை நிலவுகிறது. இதை அனுபவிக்க விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வருங்காலத்தில் இன்னும் அதிகமாக சுற்றுலா பயணிகள் வர வாய்ப்பு உள்ளது என்றனர்.