இலுப்பூர் அருகே முன்விரோத தாக்குதல்; ஒருவர் படுகாயம் 9 பேர் மீது வழக்குப்பதிவு

முன்விரோத தாக்குதல்; ஒருவர் படுகாயமடைந்தார்.

Update: 2022-04-10 18:14 GMT
அன்னவாசல்:
இலுப்பூர் அருகே ராப்பூசல் பட்டையார்களத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது 55). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சிலருக்கும் இடப்பிரச்சினை குறித்து முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று கோவிந்தராஜன் எதிர்தரப்பினருக்கு சொந்தமான இடத்தில் இருந்த மரத்தை வெட்டி விட்டதாக கூறி அவரது வீட்டுக்குள் புகுந்த 9 பேர் அவரது குடும்பத்தினரிடம் தகராறு செய்து தாக்கியதில் மணிகண்டன் என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து வலது காலில் படுகாயமடைந்த அவர் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் பேரில் இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராப்பூசல் பட்டையார்களத்தை சேர்ந்த முனியாண்டி, நாகராஜ், சரவணன், சரத், முருகன், லட்சுமணன்பட்டியை சேர்ந்த வீரமணி, வீரம்பட்டியை சேர்ந்த செந்தமிழ் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்