இலுப்பூர் அருகே தைல மரக்காட்டில் தீ

தைல மரக்காட்டில் தீ பிடித்தது.

Update: 2022-04-10 18:12 GMT
அன்னவாசல்:
இலுப்பூர் அருகே கூவாட்டுப்பட்டியை சேர்ந்தவர் பஞ்சநாதன். இவருக்கு சொந்தமான தைல மரக்காட்டின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றி எரிவதாக அப்பகுதியினர் இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 

மேலும் செய்திகள்