விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2022-04-10 18:12 GMT
குமாரபாளையம்:
குமாரபாளையம் தாலுகா பச்சாம் பாளையத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சேகர் (வயது 30). தொழிலாளி. இவர் குமாரபாளையம் திருவள்ளுவர் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். பல்லக்காபாளையத்தில் தனியார் ஆஸ்பத்திரி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சேகரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்