பண்ருட்டி அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

பண்ருட்டி அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2022-04-10 18:12 GMT

பண்ருட்டி, 

பண்ருட்டி அருகே உள்ள சிறு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் மகள் தமிழ்ச்செல்வி  (வயது 22). வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த தமிழ்ச்செல்வி விஷத்தை எடுத்து குடித்தார்.

 இதையடுத்து சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.  பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 

அங்கு டாக்டா்கள் உரிய சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தமிழ்செல்வி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்