பெண்ணாடம் அருகே சாலை விபத்தில் தொழிலாளி சாவு

பெண்ணாடம் அருகே சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Update: 2022-04-10 18:08 GMT

பெண்ணாடம்,


பெண்ணாடம் அடுத்த சின்னகொசபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 65). தொழிலாளி.  இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் கரும்பு வெட்டும் வேலையை முடித்துவிட்டு, இரவு 7 மணிக்கு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது, விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் பெரிய கொசபள்ளம் மெயின் ரோட்டில் நடந்து வந்தபோது, அவருக்கு பின்னால் மாளிகை கோட்டம் கிராமத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த மொபட் அவர் மீது மோதியது.

 இதில் காயமடைந்த சிங்காரம் சிகிச்சைக்காக பெண்ணாடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.  ஆனால் செல்லும் வழியிலேயே சிங்காரம் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து சிங்காரத்தின் மகன் பால்ராஜ் (42) கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்