ஜோலார்பேட்டை அருகே சாராயம் விற்ற 3 பேர் கைது

ஜோலார்பேட்டை அருகே சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-10 17:27 GMT
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார்  தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது தாமலேரிமுத்தூர் பகுதியைச் சேர்ந்த செங்கோடன் (வயது 42) என்பவர் சாராயம் விற்றார். 

ஜோலார்பேட்டையை அடுத்த பெரிய மூக்கனூர் சிலிப்பி வட்டம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி (40) என்பவரும் சாராயம் விற்றார்.
ஜோலார்பேட்டைைய அடுத்த குட்டூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (62) என்பவரும் சாராயம் விற்றார். மேற்கண்ட 3 ேபரும் ைகது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்