காரில் கடத்திய எரிசாராயம் பறிமுதல்

காரில் எரிசாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-10 17:15 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வளவனூர் அருகே சாலையாம்பாளையம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அவருக்கு பின்னால் ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த மோட்டார் சைக்கிளையும், காரையும் போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த காருக்குள் 120 லிட்டர் எரிசாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் சாலையாம்பாளையத்தை சேர்ந்த ஆனந்த்பாபு (வயது 34), மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் புதுச்சேரி மாநிலம் ஆண்டியார் பாளையத்தைசேர்ந்த செல்வம் (32) என்பதும், இவர்கள் இருவரும் விழுப்புரம் நகர பகுதியில் சாராயம் விற்பனை செய்வதற்காக புதுச்சேரியிலிருந்து எரிசாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த எரிசாராய பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்