வேலூரில் காட்டன் சூதாடிய வாலிபர் கைது
வேலூரில் காட்டன் சூதாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேலூர்
வேலூர் சத்துவாச்சாரி கணபதி நகரில் காட்டன் சூதாட்டம் நடைபெறுவதாக சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கணபதிநகர் சுடுகாடு அருகே நின்று கொண்டிருந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர் வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த கோபி (வயது 35) என்பதும், காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 துண்டு சீட்டுகள், ரூ.200 உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.