ஜோலார்பேட்டை அருகே கட்டிட தொழிலாளியின் மனைவி மாயம்

ஜோலார்பேட்டை அருகே கட்டிட தொழிலாளியின் மனைவி மாயமானார்.

Update: 2022-04-10 16:39 GMT
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் பழனி வட்டத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 47). இவரின் கள் மதுமித்ரா (20). இவருக்கும் சின்னமூக்கனூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான புஷ்பராஜ் என்பவருக்கும் 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.  இரவு வீட்டில் இருந்த மதுமித்ரா திடீரென மாயமாகி விட்டார். அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் காணவில்லை. 

மதுமித்ராவை காணவில்லை என தந்தை முருகன் ஜோலார்பேட்டை போலீசில் புகாா் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பெண்ைண தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்