ஒன்றியக்குழு உறுப்பினரின் கணவர் திடீர் கைது

வேட்டவலம் அருகே ஒன்றியக்குழு உறுப்பினரின் கணவர் திடீர் கைது

Update: 2022-04-10 15:51 GMT
வேட்டவலம்

கீழ்பென்னாத்தூர் ஒன்றியக் குழு உறுப்பினராக இருப்பவர் அனுராதா (தி.மு.க). இவரின் கணவர் சுகுமார். இவர் நீலந்தாங்கல் ஊராட்சி செயலாளராக பணியாற்றியவர் ஆவார். 

நீலந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவரான மணி (வயது 71) என்பவரிடம் கடந்த ஜனவரி மாதம் 10-ந்தேதி முன்விரோதம் காரணமாக சாதி பெயரை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக சுகுமார் மீது ஊராட்சி மன்ற தலைவர் வேட்டவலம் போலீசில் புகார் செய்தார். 

சுகுமார் மீது கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இந்த நிலையில் இன்று சுகுமாரை கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சமீபத்தில் ஊராட்சி செயலாளர் பணியில் இருந்து சுகுமாரை கலெக்டர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்