வேலூரில் மது விற்றவர் கைது

வேலூரில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-10 15:27 GMT
வேலூர்

வேலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று ஓல்டுடவுன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதகாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குள்ள வீடுகளில் போலீசார் சோதனை செய்தனர்.

அதில், உத்திரமாதா கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் (வயது 36) என்பவர் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானங்கள் விற்றது தெரிய வந்தது. அதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து 18 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்