திருவள்ளூரில் நடந்து வரும் புத்தக கண்காட்சியை கண்டுகளித்த கல்லூரி மாணவிகள்

திருவள்ளூரில் நடந்து வரும் புத்தக கண்காட்சியை கண்டுகளித்த கல்லூரி மாணவிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் இந்த புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

Update: 2022-04-10 14:43 GMT
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசின் சீரிய முயற்சியின் காரணமாக முதலாவது மாபெரும் புத்தக கண்காட்சி கடந்த 1-ந்தேதி முதல் வருகின்ற 11-ந்தேதி வரை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் இளைஞர்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் புத்தக வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக நடைபெற்று வரும் இந்த புத்தக கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் விரும்பி படிக்கும் வகையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் அனைத்திற்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. தினந்தோறும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் என பலதரப்பட்ட மக்களும் இந்த புத்தக கண்காட்சியை பார்வையிட்டு பயன் பெற்று செல்கின்றனர். 

இந்த நிலையில் ஜெயா கல்வி குழுமங்களின் தலைவர் பேராசிரியர் முனைவர் கனகராஜ் அறிவுறுத்தலின் பேரில், திருவள்ளூரை அடுத்த திருநின்றவூரில் உள்ள ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி மாணவிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் இந்த புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு பார்வையிட்டனர். அப்போது கல்லூரி மாணவ- மாணவிகள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்று பயன் பெற்றனர்.

மேலும் செய்திகள்