கஞ்சா ஒழிப்பு வேட்டையில் 5 பேர் கைது
கஞ்சா ஒழிப்பு வேட்டையில் 5 பேர் கைது
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தலைமையில் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா மற்றும் ரவுடியிசத்தை ஒழிக்கு வகையில் நேற்று இரவு போலீசார் ஸ்டாமிங் ஆபரேஷன் என்ற திடீர் சோதனை நடத்தினர்.
இதில் சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் உரிய ஆவணங்கள் இல்லாத 3 நான்கு சக்கர வாகனம் மற்றும் 32 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.