எட்டயபுரத்தில் 11 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
எட்டயபுரத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 11 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எட்டயபுரம் பால்பண்ணை அருகே தலா 35 கிலோ எடை கொண்ட 11 ரேஷன் அரிசி மூட்டைகள் பால் பண்ணை அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த மூட்டைகளை கடத்தி வந்து பதுக்கி வைத்தது யார்? என தெரியவில்லை. இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.