நத்தம் அருகே வேட்டைக்காரன் சுவாமி கோவில் திருவிழா
நத்தம் அருகே வேட்டைக்காரன் சுவாமி கோவில் திருவிழா நடந்தது.
நத்தம்:
நத்தம் அருகே உள்ள சேர்வீடு கிராமத்தில் வேட்டைக்காரன் சுவாமி கோவில் திருவிழா நடந்தது. இதையடுத்து இன்று மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகளுடன் வேட்டைக்காரன் சுவாமி வர்ணக்குடைகள் பரிவாரத்துடன் ஊர்வலமாக நத்தம் அவுட்டர் சாலை பகுதிக்கு வந்தார். அங்கு சுவாமிக்கு கண் திறக்கப்பட்டது. பின்னர் வேட்டைக்காரன் சுவாமி நத்தம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் சுவாமிக்கு பூமாலை, தேங்காய், பழம் படைத்து வழிபாடு செய்தனர். இதையடுத்து வேட்டைக்காரன் சுவாமி சேர்வீடு கிராமத்தை சென்றடைந்தார். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சேர்வீடு கிராமத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.