சாராயம் விற்றவர் கைது

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-10 19:00 GMT
சிக்கல்:-

கீழ்வேளூர் அருகே தேவூர்- ராதாமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராதாமங்கலம் எறும்புகன்னி மெயின் ‌‌ரோட்டில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த கண்ணதாசன் (வயது52), என்பதும் அந்த பகுதியில்‌ சாராயம் விற்றதும் தெரிய வந்தது. மேலும் இவர் காரைக்கால், வாஞ்சூர் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணதாசனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்