முடிந்தால் பெட்ரோல், டீசலுக்கான வரியை குறையுங்கள்- மராட்டிய அரசுக்கு பட்னாவிஸ் சவால்
முடிந்தால் பெட்ரோல், டீசலுக்கான வரியை குறையுங்கள் என மாநில அரசுக்கு தேவேந்திர பட்னாவிஸ் சவால் விடுத்து உள்ளார்.
மும்பை,
முடிந்தால் பெட்ரோல், டீசலுக்கான வரியை குறையுங்கள் என மாநில அரசுக்கு தேவேந்திர பட்னாவிஸ் சவால் விடுத்து உள்ளார்.
இடைத்தேர்தல்
கோலாப்பூர் வடக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரகாந்த் ஜாதவ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா பாதிப்புக்கு பிந்தைய உடல்நல பாதிப்பால் உயிரிழந்தார். அந்த தொகுதியில் நாளை (12-ந் தேதி) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் சாா்பில் சந்திரகாந்த் ஜாதவின் மனைவி ஜெயஸ்ரீ ஜாதவ் போட்டியிடுகிறார். பா.ஜனதா சத்யஜித் கதமை வேட்பாளராக நிறுத்தி உள்ளது.
மாநில அரசுக்கு சவால்
இதில் சத்யஜித் கதமுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் கோலாப்பூரில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
மகாவிகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றன. ஆனால் அவர்களால் பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க முடியவில்லை. மாநில அரசு பெட்ரோல் மூலம் லிட்டருக்கு ரூ.52 சம்பாதிக்கிறது. உங்களால் முடிந்தால் பெட்ரோல், டீசலுக்கான வரியை குறையுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.