பெங்களூருவில் நடுரோட்டில் பி.எம்.டி.சி. பஸ்சில் ‘தீ’

பெங்களூருவில் நடுரோட்டில் பி.எம்.டி.சி. பஸ்சில் தீப்பிடித்து எரிந்தது.

Update: 2022-04-09 22:35 GMT
பெங்களூரு:

பெங்களூரு பனசங்கரி போக்குவரத்து கழக பணிமனைக்கு சொந்தமான பி.எம்.டி.சி. பஸ் ஒன்று கே.ஆர். சர்க்கிள் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பஸ்சின் என்ஜினில் திடீரென்று தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. இதை கவனித்த டிரைவர் உடனடியாக பஸ்சை நடுரோட்டில் நிறுத்தினார். இதனால் பஸ் பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினர். அதற்குள் தீ பஸ் முழுவதும் பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. பின்னர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

  இருப்பினும் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. பஸ்சில் தீப்பிடித்ததை உடனடியாக கவனித்து பஸ்சை டிரைவர் நிறுத்தியதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த பஸ் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து வித்யாநகர் அருகே ஒசகெரே பகுதிக்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்