புகையிலை விற்ற கடைக்காரர் கைது
சிவகிரியில் புகையிலை விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
சிவகிரி:
சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் தலைமையில் போலீசார் சிவகிரியில் குமாரபுரம், முக்கிய ரதவீதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவகிரி வடக்கு ரதவீதியைச் சேர்ந்த ரவி (வயது 50) என்பவரின் கடையை சோதனையிட்டபோது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 42 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர்.