மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி

திருப்பனந்தாள் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

Update: 2022-04-09 21:30 GMT
திருப்பனந்தாள்;
திருப்பனந்தாள் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
அரசு பஸ் மோதியது
சென்னையிலிருந்து மன்னார்குடி நோக்கி நேற்று ஒரு அரசு பஸ் வந்தது. கும்பகோணம் அருகே மானம்பாடி பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த ஒருவர் சைக்கிளில் மெயின் ரோட்டின் குறுக்கே கடக்க முயன்றார். அவர் மீது மோதாமல் இருக்க பஸ்சை டிரைவர் திருப்பினார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த  திருவாய்பாடியை சேர்ந்த செல்வம்(வயது55) சம்பவ இடத்திலேயே இறந்தார். 
சிகிச்சை
சக்திவேல் படுகாயமடைந்தார். மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பஸ் அதே வேகத்தில் அருகில் இருந்த குளத்தில் இறங்கியது.
படுகாயமடைந்த சக்திவேல் (45) கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்