பெண் புகார்; என்ஜினீயர் உள்பட 3 பேர் மீது வழக்கு

பெண் புகாரின்பேரில் என்ஜினீயர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-04-09 20:20 GMT
பெரம்பலூர்:
புதுச்சேரி மாநிலம், முத்தியால் பேட்டை, ஒத்த வாடை தெருவில் வசிக்கும் துரையின் மகள் சித்ரா (வயது 26). இவர் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தன்னை திருமண செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அடைக்கம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சுப்ரமணியின் மகனும், என்ஜினீயருமான கமல் என்பவர் ஏமாற்றியதாகவும், அவருடைய தாய் ராணி (55), மாமா ஆகியோர் திருமணம் செய்து வைக்க முடியாது என்று தன்னை மிரட்டியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கூறியிருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணியை கைது செய்தனர். தலைமறைவான கமல், அவருடைய மாமாவை வலைவீசி தேடி வருகின்றனர். ஏற்கனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கடந்த 7-ந்தேதி சித்ரா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்