மழைக்கு வீடு இடிந்து விழுந்தது
பாளையங்கோட்டையில் மழைக்கு வீடு இடிந்து விழுந்தது
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் நேற்று மாலையில் பலத்த மழை பெய்தது. இதில் பாளையங்கோட்டை திருவடி தெருவில் உள்ள வீடு ஒன்று திடீரென்று இடிந்து விழுந்தது. இந்த வீட்டில் தற்போது யாரும் குடியிருக்கவில்லை. இதனால் எந்தவிதமான உயிர், பொருள் சேதமோ ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.