அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-04-09 19:59 GMT
கரூர், 
தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கரூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறைகளில் 1,100-க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 4 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் காலிப்பணியிடங்களை விரைந்து பூர்த்தி செய்ய வேண்டும். அவுட்சோர்சிங் நியமனங்களையும், தொகுப்பூதிய நியமனங்களையும் மாற்றி காலமுறை ஊதியத்தில் மருந்தாளுனர் நியமனங்களை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. 8 ஆண்டுகளுக்கும் மேலாக நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பலர் மாற்றுத்திறனாளிகள். இவர்கள் அனைவரையும் காலமுறை ஊதியத்தின்கீழ் கொண்டுவர வேண்டும். பாரபட்சமின்றி மருந்தாளுனர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில பொதுச்செயலாளர் சண்முகம், மாநில பொருளாளர் விஸ்வேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்