மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டம்

மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டம்

Update: 2022-04-09 19:51 GMT
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள அட்டை மில் முக்கு பகுதியில் 6 நூற்பாலைகள் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பிரதான சாலையோரம் இருந்த தனியார் மதுக்கடை அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் மாற்றம் செய்யப்பட்டது. இந்தநிலையில் அதே பகுதியில் ஆலைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு மத்தியில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. பொது மக்கள் கேட்டதற்கு கிட்டங்கி கட்டப்படுவதாக கூறி உள்ளனர். இந்தநிலையில் அந்த இடத்தில் மதுக்கடை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு இடமாற்ற கோரினர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கீழராஜகுலராமன் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி, தனியார் மதுக்கடை இடமாற்றம் செய்யப்படும் என போலீசார் அளித்த உறுதியை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்