திருச்செங்கோட்டில் ரூ.3 கோடிக்கு மஞ்சள் ஏலம்

திருச்செங்கோட்டில் ரூ.3 கோடிக்கு மஞ்சள் ஏலம் போனது.

Update: 2022-04-09 18:38 GMT
எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் விரலி ரக மஞ்சள் குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.7 ஆயிரத்து 219 முதல் ரூ.10 ஆயிரத்து 443 வரையிலும், கிழங்கு மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 9 முதல் ரூ.8 ஆயிரத்து 659 வரையிலும் பனங்காலி ரக மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.12 ஆயிரத்து 969 முதல் ரூ.20 ஆயிரத்து 9 வரையிலும் விற்பனையானது. நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 600 மஞ்சள் மூட்டைகள் ரூ.3 கோடிக்கு ஏலம் போனது.

மேலும் செய்திகள்