வெப்படையில் முனியப்பன் சாமி கோவில் திருவிழா

வெப்படையில் முனியப்பன் சாமி கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.

Update: 2022-04-09 18:38 GMT
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் வெப்படை பஸ் நிறுத்தத்தில் முனியப்ப சாமி கோவில் பங்குனி திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று காலை முனியப்பன் கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். வெப்படை, குமாரபாளையம் பகுதிகளில் உள்ள ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிடா வெட்டி பக்தர்கள் வழிபாடு நடத்த உள்ளனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிடா வெட்டி வழிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்